... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
பாரமதி இடைத்தேர்தல் போட்டியில் இருந்து காங்கிரஸ் விலகல் - சுனேத்ரா பவாருக்கு ஆதரவு!

பாரமதி இடைத்தேர்தல் போட்டியில் இருந்து காங்கிரஸ் விலகல் - சுனேத்ரா பவாருக்கு ஆதரவு!

மும்பை: மறைந்த தலைவர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, அந்தத் தொகுதிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல் அறிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவராகவும் மகாராஷ்டிராவின் துணை முதல்வராகவும் இருந்த அஜித் பவார், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து அவரது மனைவி சுனேத்ரா பவார் மாநிலத்தின் புதிய துணை முதல்வராக பொறுப்பேற்றார். அஜித் பவாரின் மறைவை அடுத்து அவர் வெற்றி பெற்ற பாரமதி தொகுதிக்கு ஏப்ரல் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, அந்த தொகுதியில் போட்டியிட சுனேத்ரா பவார் கடந்த 6-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஆகாஷ் மோரே உட்பட 53 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், போட்டியில் இருந்து விலக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், சரத் பவார், சுப்ரியா சுலே, மகாராஷ்டிர அமைச்சர் மகரந்த் பட்டேல் உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பாரமதி இடைத்தேர்தல் களத்திலிருந்து உங்கள் வேட்பாளரை திரும்பப் பெறுங்கள் என்று பட்னவிஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார். சுப்ரியா சுலே வெளியிட்ட எக்ஸ் பதிவில், அஜித் பவாரின் மறைவை அடுத்து பாரமதி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அஜித் பவாரின் அரசியல் வாழ்க்கை காங்கிரஸ் கட்சியில் இருந்துதான் தொடங்கியது. காங்கிரஸ் கட்சி மீது அஜித் பவார், தனது வாழ்நாள் முழுக்க மரியாதை வைத்திருந்தார். அனைவரையும் உள்ளடக்கிய அவரது பொது வாழ்க்கை மரபுக்கு கண்ணியத்துடனும் இதயப்பூர்வமாகவும் அஞ்சலி செலுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல் உடன் தொலைபேசியில் பேசிய சுனேத்ரா பவார், மகாராஷ்டிர அமைச்சர் மகரானந்த் பாட்டில் தலைமையிலான தூதுக்குழுவையும் அனுப்பிவைத்தார். இதையடுத்து, இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர் ஆகாஷ் மோரே தனது வேட்புமனுவை திரும்பப் பெறுவார் என்று ஹர்ஷ்வர்தன் சப்கல் அறிவித்தார். அதேநேரத்தில், 2029 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை நிச்சயம் நிறுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். வேட்புமனுவை திரும்பப் பெற இன்று கடைசி நாள் எனும் நிலையில், ஆகாஷ் மோரே தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளார். சுயேட்சை வேட்பாளர்கள் 20 பேரும் தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனர். இதன் காரணமாக இந்த இடைத்தேர்தலில் சுனேத்ரா பவார் எளிதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News