Select Location
All Locations
State
Region
City / District
#கேண்டிடேட்ஸ் செஸ்: முதல் சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி

கேண்டிடேட்ஸ் செஸ்: முதல் சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி

கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் சைப்ரஸ் நாட்டின் பெஜியா நகரில் உள்ள சொகுசு ஓட்டலில் நடந்து வருகிறது. இதில் பிரக்ஞானந்தா (இந்தியா), பேபி யானா கருணா, ஹிகரு நகமுரா (இருவரும் அமெரிக்கா), அனிஷ் கிரி (நெதர்லாந்து), மத்தியாஸ் புளுபாம் (ஜெர்மனி), ஜவோகிர் சிந்தாரோவ் (உஸ்பெகிஸ்தான்), ஆந்த்ரே இசிபென்கோ (ரஷியா), வெய்யி (சீனா) ஆகிய 8 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். அதாவது 14 சுற்று முடிவில் அதிக புள்ளிகள் எடுக்கும் வீரர் பட்டத்தை வெல்வதுடன் உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கும் தகுதி பெறுவார். இந்நிலையில், நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரியை வீழ்த்தி ஒரு புள்ளியைப் பெற்றார்.


Malaimalar 1 month ago
Home Flash News