... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#மீரட்டில் இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

மீரட்டில் இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

புதுடெல்லி: தலைநகர் டெல்லி - மீரட் இடையிலான 82 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்தியாவின் முதல் நமோ பாரத் ஆர்ஆர்டிஎஸ் ரயில் பாதையில் எஞ்சியிருந்த பகுதிகளிலும் பணிகள் நிறைவடைந்த நிலையில் அந்த ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று (பிப்.22) தொடங்கி வைத்தார். இதே போல 23 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள மீரட் மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நமோ பாரத் ஆர்ஆர்டிஎஸ் ரயில்: தலைநகர் டெல்லியில் இருந்து சாஹிபாபாத், காசியாபாத், மோதிநகர், மீரட் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலும், இந்த பகுதிகளுக்கு இடையிலான பயண நேரத்தை குறைக்கும் நோக்கிலும் நமோ பாரத் ஆர்ஆர்டிஎஸ் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. மீரட் மெட்ரோ: இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை மீரட் மெட்ரோ வழங்குகிறது. 

அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோமீட்டர் வேகம் வரை மீரட் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இந்தியாவிலேயே நமோ பாரத் ஆர்ஆர்டிஎஸ் ரயில், மெட்ரோ ரயில் என இரண்டும் ஒரே தடத்தில் பயணிக்கும் வகையில் மீரட் மெட்ரோ வடிவமைக்கப்பட்டுள்ளது. 23 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த மெட்ரோ தடத்தில் 13 ரயில் நிலையங்கள் உள்ளன. 30 நிமிடத்தில் பயண தூரத்தை மீரட் மெட்ரோ ரயில் சேவை நிறைவு செய்கிறது.

Source : Hindu Tamil

6 hours ago

Home Flash News