சசிகுமார் நடிப்பில் வெளியான “மை லார்ட்” பட நன்றி அறிவிப்பு விழா
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.