... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#கேரள அரசு பொய் வழக்கு: தந்திரி ராஜீவரு வாதம்

கேரள அரசு பொய் வழக்கு: தந்திரி ராஜீவரு வாதம்

கொல்லம்: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் கொள்ளை வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரு கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரது ஜாமீன் மனு மீது நேற்று முன்தினம் கொல்லம் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது தந்திரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, “கோயில் தங்கம் கொள்ளையில் தந்திரிக்கு தொடர்பு இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 2018-ல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைந்து தரிசனம் செய்ய கேரள மாநில அரசு அனுமதித்தது. இதற்கு அப்போது தந்திரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதற்கு பழிவாங்கவே தங்கத் திருட்டு வழக்கை கேரள அரசு அதிகாரிகள் தொடர்ந்துள்ளனர்’’ என்று வாதாடினார். அதன் பின்னர் தந்திரிக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Source : Hindu Tamil

1 day ago

Home Flash News