... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#Vijay - Rashmika Wedding : விஜய் - ராஷ்மிகா திருமண தேதி, நேரம் மற்றும் இடம்.. லேட்டஸ்ட் அப்டேட் இதோ

Vijay - Rashmika Wedding : விஜய் - ராஷ்மிகா திருமண தேதி, நேரம் மற்றும் இடம்.. லேட்டஸ்ட் அப்டேட் இதோ

Vijay Deverakonda Rashmika Mandanna Wedding: விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் திருமணச் செய்திகள் பரவி வரும் இந்த நேரத்தில் தற்போது இவர்களின் திருமண தேதி, நேரம் மற்றும் திருமணம் நடக்கப் போகும் இடம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் மற்றும் ராஷ்மிகா திருமண விழா விவரங்கள்..? விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் திருமணச் செய்திகள் நாளுக்கு னால் தீப் பிடித்து வரும் இந்த நேரத்தில் பிப்ரவரி 24 ஆம் தேதி இவர்களின் ஹல்தி சடங்கு மற்றும் 25 ஆம் தேதி சங்கீத் விழாக்களுடம் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 26 ஆம் தேதி சில உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. உதய்பூரின் புறநகரில் உள்ள ஒரு ஹில் ரிசார்ட்டில் திருமணம் விழா நடைபெறும். 'The Mementos by ITC Hotels' இல் திருமணம் நடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மற்றும் ராஷ்மிகா வரவேற்பு விழா விவரங்கள் இந்த ஜோடி நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மட்டுமே தனிப்பட்ட திருமண விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் தனிப்பட்டதாக இருக்கும் அதே வேளையில், வரவேற்பு பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் 4, 2026 அன்று ஹைதராபாத்தில் ஒரு பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த ரிசப்ஷன் மிகவும் ஆடம்பரமான ஹோட்டல்களில் ஒன்றான 'Taj Krishna' ஹோட்டலில் நடைபெறப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் டோலிவுட் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் இந்த விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமண விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிவதைத் தடுக்க கடுமையான 'no-phone' கொள்கை செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

OTT-யிலிருந்து மிகப்பெரிய தொகை? விஜய் ராஷ்மிகா திருமணத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் உரிமைகளுக்கு ஒரு முன்னணி OTT நிறுவனம் மிகப்பெரிய விலையில் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், விஜய் தேவரகொண்டா இந்த வாய்ப்பை நிராகரித்ததாக கூறப்படுகிறது. விஜய் தனது வாழ்க்கையின் இந்த முக்கியமான தருணத்தை வணிக ரீதியாக அல்லாமல் முற்றிலும் தனிப்பட்டதாக வைத்திருக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.

Source : Zee News Tamil

2 days ago

Home Flash News