... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!

2 லெஜென்ட்ஸ் 1 ஃப்ரேம்... 45 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!

ரஜினி-கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகித் தென்னிந்தியத் திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை 'ஜெயிலர்' புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். 45 ஆண்டுகளுக்கு பின் இருவரும் இணைந்து நடிக்கவுள்ள இப்படத்தின் புரொமோவுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

படக்குழுவினர் இந்தப் படம் குறித்த அப்டேட்களை வெளியிடத் தொடங்கியுள்ளனர். அதன்படி, இன்று மாலை 7.12 மணிக்கு படக்குழு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டது. "2 லெஜென்ட்ஸ் 1 ஃப்ரேம்" என்ற டேக் லைனுடன் வெளியான அந்த போஸ்டரில் ஒரு கார் மெக்கானிக் ஷெட்டில் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இது, சமீபத்தில் வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.

தற்போது ரஜினியின் தனது 173வது படத்தில் நடிக்கஉள்ளார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. 'டான்' படத்தின் இயக்குனர் சி.பி. சக்ரவர்த்தி இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படம் முடிந்த பிறகு, நெல்சன் திலீப்குமார் இயக்கும் ரஜினி - கமல் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. சிபி சக்ரவர்த்தி இயக்கும் படம் முடிந்தவுடன், இந்த ஆண்டு இறுதியிலேயே ரஜினி - கமல் இணையும் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் ரஜினியின் படத்தை 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு யோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில், நாளை காலை 12.07 மணிக்கு அடுத்த அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், 12 என்பது ரஜினியின் பிறந்த தேதியையும், 7 என்பது கமலின் பிறந்த தேதியையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ரஜினி மற்றும் கமலின் அடுத்தடுத்த அப்டேட்களால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

Source : Indian Express Tamil

2 days ago

Home Flash News