இந்தியாவிடம் வீழ்ந்தாலும் வரலாறு படைத்த பாகிஸ்தான்: டி20 உலகக்கோப்பை சுவாரசியம்!
India vs Pakistan : டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. பெறும் எதிர்பார்ப்புக்கும் இடையே நேற்று கொழும்பில் நடைபெற்ற இந்த டி20 போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இருப்பினும், இந்த ஆட்டத்தில் ஒரு அபூர்வமான சாதனையைச் சமன் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.