... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#கோவை ஈஷா யோகா மையத்தில் பிப். 15-ல் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம்

கோவை ஈஷா யோகா மையத்தில் பிப். 15-ல் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம்

கோவை: ஈஷா யோகா மையத்​தில் வரும் 15-ம் தேதி நடை​பெற உள்ள மகா சிவராத்திரி விழா​வில், மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத்​சிங் பங்​கேற்​கிறார். இதுகுறித்து தென் கைலாய பக்தி பேர​வையைச் சேர்ந்த தன்​னார்​வலர் ரவீந்​திரன் கோவை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: ஈஷா​வில் 32-வது மகா சிவராத்திரி கொண்​டாட்​டங்​கள் வரும் 15-ம் தேதி பிரம்​மாண்​ட​மான அளவில் நடை​பெறுகின்​றன. சிறப்பு விருந்​தின​ராக பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் கலந்து கொள்​கிறார்.

மேலும், பல்​வேறு முக்​கியப் பிர​முகர்​கள் மற்​றும் லட்​சக்​கணக்​கான பொது​மக்​கள் கலந்து கொள்​கின்​றனர். அன்று மாலை 6 மணிக்​குத் தொடங்​கி, மறு​நாள் காலை 6 மணி வரை விழா கொண்​டாடப்பட உள்​ளது. ஆதி​யோகி சிலை முன்​புறம், ஈஷா நிறு​வனர் சத்​குரு​வுடன் நடை​பெறும் இவ்​விழா​வில் சக்​தி​வாய்ந்த தியானங்​கள், மந்​திர உச்​சாடனை​கள், யோகேஷ்வர லிங்க மஹா அபிஷேகம் மற்​றும் சிறந்த கலைஞர்​களின் இசை நிகழ்ச்​சிகள் உள்​ளிட்​டவை நடை​பெற உள்​ளது.

இரவு முழு​வதும் தியானலிங்​கம் மற்​றும் லிங்க பைரவி வளாகங்​கள் பொது மக்​களின் தரிசனத்​திற்கு திறந்​திருக்​கும். தியான லிங்​கத்​துக்கு பொது​மக்​கள் அபிஷேகம் செய்​ய​லாம்.

Source : Hindu Tamil

9 days ago

Home Flash News