சென்னையில் இன்று ஹாக்கி இந்தியா லீக் போட்டி தொடக்கம்
சென்னை: ஹாக்கி இந்தியா அமைப்பு சார்பில் ஹாக்கி இந்தியா லீக் போட்டிகள் சென்னையில் இன்று முதல் நடைபெறவுள்ளன. ஹாக்கி இந்தியா அமைப்பு சார்பில் ஹாக்கி இந்தியா லீக் போட்டி 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது. 2017-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 5 சீசன்கள் நடைபெற்றது. அதன் பின்னர் இப்போட்டி நிறுத்தப்பட்டது. இதையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கி இந்தியா லீக் போட்டி கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது. ரூர்கேலா, ராஞ்சி நகரங்களில் இப்போட்டி நடைபெற்றது. இதில் பெங்கால் டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது