இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஜோயர்ட் மரைன் நியமனம்
புதுடெல்லி: இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜோயர்ட் மரைன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொர்பான அறிவிப்பை ஹாக்கி இந்தியா அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த ஜோயர்ட் மரைன் உடனடியாக இந்திய மகளிர் அணியினருடன் இணைந்து கொள்வார் என்று தெரியவந்துள்ளது. ஜோயர்ட் மரைனுக்கு உதவியாக, அனலிட்டிக்கல் பயிற்சியாளராக மத்தியாஸ் விலா இருப்பார். இவர் அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர்.