சின்கியுபீல்ட் கோப்பை செஸ் 2ம் இடத்தில் தொடரும் தமிழகத்தின் பிரக்ஞானந்தா
சின்கியுபீல்ட்: சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டிகளில், 6 சுற்றுகள் முடிவில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா 2ம் இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில், செயின்ட் லூயிஸ் நகரில், சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட இத் தொடரின் 6வது சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன. போலந்து கிராண்ட் மாஸ்டர் ஜேன் கிறிஸ்டோஃப் துடா உடன் நடந்த போட்டியில், தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, 32வது நகர்த்தலில் டிரா செய்தார்.