Select Location
All Locations
State
Region
City / District
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு...

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு...

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக அறிவித்து உள்ளது. இதன்படி மதுராந்தகம் தொகுதியில் ஐ.பரந்தாமன், தாராபுரம் தொகுதியில் சுகன்யா ஆகியோர் திமுக சார்பில் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு; "வருகிற 06-10-2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் திரு. ஐ.பரந்தாமன், பி.ஏ., பி.எல்., (தி.மு.க.சட்டத்துறை இணைச் செயலாளர்) அவர்களும்; தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் திருமதி. எஸ். சுகன்யா, எம்.ஏ., பி.எல்., அவர்களும் கழக வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.


Dinakaran 1 hour ago
Home Flash News