Select Location
All Locations
State
Region
City / District
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்

டெஹ்ரான்: ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. சுமார் ஒரு மாத காலத்தில் முதல் முறையாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் மேற்காசியாவில் போர்ச் சூழல் ஆறாவது மாதத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமைந்துள்ள ஈரானின் சிறிய தீவு பகுதியில் உள்ள ஈரான் ஏவுகணை ஏவும் தளத்தை அமெரிக்கா தாக்கி உள்ளது. 

இதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் கொடுத்துள்ளது. அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படை இதனை உறுதி செய்துள்ளது. இந்த மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு ஒரு டாலர் உயர்ந்துள்ளது. இந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் பங்குச் சந்தை வர்த்தகம் சரிவை கண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

லாராக் தீவு பகுதியில் அமெரிக்கா மேற்கொண்ட அண்மைய தாக்குதலுக்கு பதிலடியாக மேற்காசியாவின் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை ஈரானின் வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. லாராக் தீவில் தாக்குதல் மேற்கொள்ள ஜோர்டானில் உள்ள ராணுவ தளத்தை அமெரிக்கா பயன்படுத்தியதாக ஈரான் குற்றச்சாட்டு வைத்துள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதலில் ஈரான் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.


Hindu Tamil 45 minutes ago
Home Flash News