Select Location
All Locations
State
Region
City / District
நேபாளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழக பயணிகளின் பட்டியல் வெளியீடு

நேபாளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழக பயணிகளின் பட்டியல் வெளியீடு

புதுடெல்லி: கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காகச் சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் நேபாளத்தில் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், மீட்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: சிவரஞ்சனி முத்துநாதன், கர்பகம் ராஜமோகன், மாறன் கோவிந்தசாமி, சாந்தி மாறன், முத்துகுமரேசன் ராமலிங்கம் ஆகியோர் மீட்கப்பட்டுள்ளனர். நவு கபீர்தாஸ், விஜயபுவனேஸ்வரி விஸ்வநாதன், மைதிலி முத்துகுமரேசன், தியாகராஜன் ரத்தினம், கிருபாகரி பாலசுப்ரமணியம் ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். வள்ளிநாயகி சிவகுமார், சந்தியா ஜெயராமன், திருமாவளவன் கோவிந்தராசு, கனகசபை நடேசபிள்ளை, ராதை கனகசபை, ரத்தினகுமார் குஞ்சிதபாதம், பூங்குழலி பொன்னம்பலம், பழனியப்பன் மெய்க்கபெருமாள், கலைமதி பழனியப்பன், ரகுநாதன் முனிராஜ், மணிமேகலை சுகுமார் ஆகியோர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.


Hindu Tamil 2 days ago
Home Flash News