கட்டா குஸ்தி 2 முதல் பாலன் தி பாய் வரை... இந்த வார ஓடிடி ரிலீஸ்
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
சின்ன சின்ன ஆசை மலையாளத் திரைப்படமான 'சின்ன சின்ன ஆசை' நாளை முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இந்தத் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது
ஹார்ட் பீட் ஹார்ட் பீட் சீசன் 3 தொடர் வரும் 30-ந்தேதி அன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. மருத்துவ பின்னணியைக் கொண்ட இத்தொடரில் தீபா பாலு, அனுமோல் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.
பாலன்: தி பாய் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான படம் ‘பாலன்: தி பாய்’. 'ஆவேஷம்' மற்றும் 'ரோமஞ்சம்' படங்களின் இயக்குநரான ஜித்து மாதவன் இதன் திரைக்கதையை எழுதியுள்ளார். ஃபர்சானா பாலத்திங்கல், ஆதிஷேஷன் கே.ஆர்., முகமது ஜினான் உள்ளிட்டோர் நடித்து இப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். ‘பாலன்’ கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. அதன்படி, ‘பாலன்’ திரைப்படம் வருகிற 31-ந்தேதி முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.
கட்டா குஸ்தி 2
இயக்குநர் செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘கட்டா குஸ்தி 2’. வேல்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில் வரும் 31-ந்தேதி அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் கண்டு மகிழலாம்
லவ் ஓ லவ்
தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் பவிஷ். இவர் தனுஷின் அக்கா மகன். இவர் நடிப்பில் உருவான 2வது படம் ‘லவ் ஓ லவ்’. இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நாயகியாக நாக துர்கா நடித்திருந்தார். ஃபாக்ஸன் இசையமைத்தார். படத்தில் கேஎஸ் ரவிக்குமார், செல்வராகவன், வனிதா விஜயகுமார், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதலர்களிடையே கிரெடிட் கார்டால் ஏற்படும் பொருளாதார சிக்கல்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இந்தப் படம் வரும் 31-ந் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவானா
இயக்குநர் ஸ்ரீகாந்த் சங்கீஷெட்டி இயக்கத்தில் ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்மேகா மணிமேகலை நடித்த படம் ‘தீவானா’. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. அதன்படி, ‘தீவானா’ படம் வருகிற 31-ந்தேதி ஆஹா வீடியோ ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது. ஆஹா கோல்ட் சந்தாதாரர்கள் ஒரு நாள் முன்னதாக, அதாவது ஜூலை 30 அன்றே, இப்படத்தைப் பார்க்கலாம். இந்த ஓடிடி வெளியீடு தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.