Select Location
All Locations
State
Region
City / District
அரிசி விலை உயர்வு தற்காலிகமானதே, அச்சம் வேண்டாம் - அரிசி ஆலை உரிமையாளர்கள் விளக்கம்

அரிசி விலை உயர்வு தற்காலிகமானதே, அச்சம் வேண்டாம் - அரிசி ஆலை உரிமையாளர்கள் விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் அரிசி விலை கணிசமாக உயர்ந்திருந்தாலும் இது தற்காலிகமானதே என அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறி உள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அரிசி ஆலை உரிமையாளர்கள், அடுத்து நடைபெற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்று, அரிசிக்கான ஜிஎஸ்டி-யை நீக்க வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.Urban Transit

அரிசி விலை உயர்வு தற்காலிகமானதே, அச்சம் வேண்டாம் - அரிசி ஆலை உரிமையாளர்கள் விளக்கம் 09:52 AM Jul 18, 2026 IST featured-imgfeatured-img share Share fb twitter whatsapp சென்னை: தமிழ்நாட்டில் அரிசி விலை கணிசமாக உயர்ந்திருந்தாலும் இது தற்காலிகமானதே என அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறி உள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அரிசி ஆலை உரிமையாளர்கள், அடுத்து நடைபெற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்று, அரிசிக்கான ஜிஎஸ்டி-யை நீக்க வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.Urban Transit இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த துளசிங்கம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 வரை உயர்ந்துள்ளது. அதே போல விவசாயிகளுக்கு ஆகும் கூடுதல் உற்பத்தி செலவும் கணிசமாக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் சாதாரண மக்கள் வாங்கி பயன்படுத்தும் அரசி விலை சற்று உயர்ந்துள்ளது என்றாலும் இந்த நிலை தற்காலிகமானதே, அச்சப்படும்படி இல்லை என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் சூப்பர் பைன் ரக அரிசிகளின் விலை உயர்வு ஆகஸ்ட் மாத இறுதி வரை மட்டுமே நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பிறகு குறைந்துவிடும் என்றும் குறிப்பிட்டார். அதே போல தமிழகத்தில் அரிசிக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்றும் அவர் உறுதிபட கூறினார்.


Dinakaran 1 hour ago
Home Flash News