Select Location
All Locations
State
Region
City / District
கர்நாடகா நோக்கி செல்ல முயன்ற தமிழக விவசாயிகள் கைது..!

கர்நாடகா நோக்கி செல்ல முயன்ற தமிழக விவசாயிகள் கைது..!

உபரி நீர் தமிழக விவசாயிகள் சங்கம், இளம் விவசாயிகள் சங்கம், விவசாய முன்னேற்ற கழகம் சார்பில், காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும், அம்மாநில அணைகளில் உள்ள உபரி நீரை திறக்கும் வகையிலும், தமிழக எல்லையான, ஓசூர் மூக்கண்டப்பள்ளி தோப்பம்மா கோவி லிலிருந்து, கர்நாடகா மாநிலம் நோக்கி, விவசாயிகள் நேற்று பேரணி சென்றனர்.

அணைகளை உடைக்க கையில் கடப்பாரை, மண்வெட்டி எடுத்து சென்றனர். விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்ய போவதாக தெரிவித்தனர். சிறிது நேரம் போலீசார், விவசாயிகள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. விவசாய சங்க நிர்வாகிகள், ஒன்பது பெண்கள் உட்பட, 125 பேரை, போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். கர்நாடகா அரசு, மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி யும், தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டித்தும், கன்னட கூட்டமைப்புகளின் சார்பில், கர்நாடகாவில் நேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. போராட்டம் தோல்வி இதையடுத்து, தமிழகத்திலிருந்து கர்நாடகா மாநிலம், பெங்களூரு செல்லும் தமிழக அரசு புறநகர் பஸ்கள், நேற்று காலை, 6:00 மணி முதல், தமிழக எல்லையான ஓசூருடன் நிறுத்தப்பட்டன. கர்நாடகாவிலிருந்து அம்மாநில அரசு பஸ்கள் ஓசூருக்கு இயக்கப்பட வில்லை. ஆனால், கார், லாரி, இருசக்கர மற்றும் சரக்கு வாகனங்கள் தொடர்ந்து சென்று வந்தன. கர்நாடகா மாநிலத்தில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. அதனால் முழு அடைப்பு போராட்டம் தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே, கன்னட கூட்டமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், அத்திப்பள்ளி ஆர்ச் அருகே, பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சிறிது நேரம் மறியல் நடந்தது. வாட்டாள் நாகராஜ், கன்னட ஜாக்ருதி வேதிகே தலைவர் மஞ்சுநாத் தேவா உட்பட, 75 பேரை போலீசார் கைது செய்தனர்.


Smacy News 1 hour ago
Home Flash News