Select Location
All Locations
State
Region
City / District
சதுரகிரி மலைக்குச் செல்ல 4 நாட்கள் மட்டுமே அனுமதி..!

சதுரகிரி மலைக்குச் செல்ல 4 நாட்கள் மட்டுமே அனுமதி..!

ஆனி அமாவாசையை முன்னிட்டு நாளை மறுநாள் முதல் (12ம் தேதி முதல் 15-ந் தேதி வரை) 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறிச்சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை, கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஜூலை 15ம் தேதி அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பொருட்கள் மலை மீது கொண்டு செல்ல அனுமதி கிடையாது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேற அனுமதி இல்லை. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Smacy News 5 days ago
Home Flash News