Select Location
All Locations
State
Region
City / District
பிரம்மாண்டம் என்பது குறைவான வார்த்தை... வாரணாசியை வியந்த பிருத்விராஜ்!

பிரம்மாண்டம் என்பது குறைவான வார்த்தை... வாரணாசியை வியந்த பிருத்விராஜ்!

நடிகர் பிருத்விராஜ் வாரணாசி திரைப்படம் குறித்து பேசியுள்ளார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் என பிருத்விராஜ் மலையாள சினிமாவின் முக்கியமான பிரபலமாக இருந்து வருகிறார். இவர் இயக்கிய எம்புரான் மிகப் பெரிய வணிகத்தைச் செய்ததுடன் மலையாளத்தில் எடுக்கப்பட்ட அதிக பட்ஜெட் திரைப்படம் என்கிற பெயரையும் பெற்றது.

தற்போது, பிருத்விராஜ் இயக்குநர் ராஜமௌலியின் வாரணாசி மற்றும் ஐ நோபடி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் பிருத்விராஜ், “வாரணாசி போன்ற திரைப்படங்களை உருவாக்கும் போது, பிரம்மாண்டம் என்பதே குறைவாகக் கணக்கிடுவதுதான். இதற்கு முன் இப்படியொரு படத்தை நான் பார்த்ததில்லை. இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியும் இதையே என்னிடம் சொன்னார். எனக்கு ஏதேனும் ஆலோசனைகள் இருந்தாலும் ராஜமௌலி அதனைக் கேட்டு தன் கருத்தைச் சொல்வார். 30 ஆண்டுகளாக காத்திருந்து தன் முதல் திரைப்படத்தை இயக்கும் இயக்குநராக ராஜமௌலி இப்படத்தில் கடுமையாகப் பணியாற்றி வருகிறார். எங்களுக்கு காலை 7 மணிக்கு முதல் ஷாட் என்றால், அவர் அதிகாலை 5 மணிக்கே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தன் உதவி இயக்குநர்களுடன் ஒத்திகைகளைப் பார்த்துக்கொண்டிருப்பார்.

முதல் படத்தை இயக்கும் இயக்குநருக்கு இருக்கும் உழைப்பு இப்போதும் அவரிடம் இருக்கிறது. வாரணாசி கதையை என்னிடம் அவர் சொன்னபோது, குறிப்பிட்ட காட்சியைச் சொல்லி எப்படி இதை எடுப்பீர்கள்? எனக் கேட்டேன். அதற்கு அவர், ‘எனக்கும் தெரியாது. ஆனால், கண்டுபிடிப்போம்’ என்றார். படப்பிடிப்பின் போது அதனை மிகச் சிறப்பாகவும் எடுத்தார். ஒரு நடிகராக, இயக்குநராக, மனிதனாக வாரணாசி படத்தின் மூலம் செழுமையடைந்து வருகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News