Select Location
All Locations
State
Region
City / District
எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தும் வாகனங்களுக்கு காப்பீடு மறுக்கப்படவில்லை: ஒன்றிய அரசு

எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தும் வாகனங்களுக்கு காப்பீடு மறுக்கப்படவில்லை: ஒன்றிய அரசு

டெல்லி: எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தும் வாகனங்களுக்கு காப்பீடு மறுக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில், மறுக்கப்படவில்லை என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவது காரணமாக வாகனங்களில் பழுது ஏற்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வந்தது. இதை தொடர்ந்து அவர்களுக்கு இந்த காப்பீட்டிலும் பிரச்னை வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. அதாவது E-20 என்ற அந்த ரக வாகனங்கள் இல்லாத மற்ற பழைய வாகனங்களில் பெரும்பாலும் இந்த பிரச்னை வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 E-20 எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தும் வாகனங்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும்போது அவை காப்பீட்டில் கீழ் வராது என்று சில காப்பீட்டு நிறுவனங்கள் கூட அதிகாரப்பூர்வமாகவே தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு, ஒன்றிய அரசு ஒரு விளக்கமளித்துள்ளது. எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தி வாகனங்களில் ஏற்படக்கூடிய அந்த பிரச்சனைகள் முழுவதும் காப்பீட்டு கீழ் வரும் என்ற ஒரு உத்தரவாதத்தை அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகனங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டிற்கு ஒரு மிகப்பெரிய நன்மை ஏற்படுவதாகவும், அதைபோல் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு என்பது உலகளாவிய அளவில் பயன்படுத்தி வருவதாகவும், இதனால் யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படுவது இல்லை என்றும் அரசு கூறியுள்ளது. அதைபோல் E-20 எத்தனால் கலந்த பெட்ரோலால் ஏற்படும் பிரச்சணைகள் காப்பீட்டின் கீழ் வராது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது மற்றும் தவறான தகவல் என்று அரசு கூறியுள்ளது.


Dinakaran 3 hours ago
Home Flash News