‘தமிழ் சினிமாவை மாற்றியமைத்தவர்’ - பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
புது டெல்லி: இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தவர். கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம் மிகவும் குறிப்பிடத்தக்கது. துயரம் மிகுந்த இந்த நேரத்தில், அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் என் எண்ணங்கள் இணைந்துள்ளன. ஓம் சாந்தி.’ எனத் தெரிவித்துள்ளார்.