Select Location
All Locations
State
Region
City / District
இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் - திமுக அறிவிப்பு

இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் - திமுக அறிவிப்பு

இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என திமுக அறிவித்துள்ளது.

டெல்லியில் வருகிற 8ஆம் தேதி இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என திமுக அறிவித்துள்ளது. "இந்தியா" கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கியது எனக் கூறியுள்ள திமுக தலைமை, மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்சினைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்தார் எனவும், தேர்தலுக்குப் பின், காங்கிரஸ், திமுகவுக்கு இழைத்த துரோகத்தினால் திமுக தொண்டர்கள் மனக்காயமுற்றுள்ளனர் என்றும் கூறியுள்ளது


Smacy News 1 hour ago
Home Flash News