Select Location
All Locations
State
Region
City / District
நேபாள பிரதமர் பேச்சால் பரபரப்பு இந்திய நிலப்பகுதிகளை நேபாளம் ஆக்கிரமித்துள்ளது

நேபாள பிரதமர் பேச்சால் பரபரப்பு இந்திய நிலப்பகுதிகளை நேபாளம் ஆக்கிரமித்துள்ளது

காத்மாண்டு: நேபாள நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அந்நாட்டு பிரதமர் பலேந்திர ஷா கூறியதாவது: நான் பிரதமரான பிறகு சமீபத்தில் அறிந்த உண்மையை நீங்கள் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். இந்தியா, நேபாளத்தின் நிலங்களை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல், நேபாளமும் பல இடங்களில் இந்தியாவின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது.

கலாபானி, லிபுலேக், லிபியாதூரா ஆகிய பகுதிகள் தொடர்பாக நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் நீண்ட கால எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. அப்பகுதிகள் உத்தரகாண்டின் ஒரு பகுதி என இந்தியா உரிமை கோருகிறது. இதுதொடர்பாக நேபாள அரசு இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வமாக தூதரக குறிப்பை அனுப்பி உள்ளது. வரலாற்று நிபுணர்கள், நில அளவையாளர்கள் உள்ளிட்ட நிபுணர்களின் உதவியுடன் தூதரக வழிமுறைகள் மூலம் ஒன்றாக அமர்ந்து இப்பிரச்னையை தீர்க்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த விவகாரத்தை ஏற்கனவே சீனா மற்றும் பிரிட்டனிடமும் எடுத்துச் சென்றுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். இந்த பேச்சு நேபாளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நேபாள வெளியுறவு அமைச்சகம் நேற்று, ‘பிரதமர் பலேந்திர ஷா கூறியது இரு நாடுகளுக்கும் இடையிலான யாருக்கும் சொந்தமில்லாத நிலம் மற்றும் எல்லை தாண்டிய ஆக்கிரமிப்புகள் தொடர்பானவை’ என விளக்கம் அளித்துள்ளது.


Dinakaran 1 hour ago
Home Flash News