Select Location
All Locations
State
Region
City / District
சென்னை மக்கள் கவனத்திற்கு..! ஜூன் 1 முதல் 5ம் தேதி வரை 48 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை மக்கள் கவனத்திற்கு..! ஜூன் 1 முதல் 5ம் தேதி வரை 48 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம்

அரக்கோணம் – திருத்தணிக்கு ஜூன் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை அதிகாலை 4 மணி, 5 மணி நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள், திருத்தணி – அரக்கோணத்திற்கு அதே நாட்களில் இரவு 9.15, 11.10, ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரெயில்கள் திருத்தணி – செண்ட்ரலுக்கு அதே நாட்களில் காலை 6.3 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ஆகிய 5 மின்சார ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை – அரக்கோணத்திற்கு ஜூன் 1 முதல் 5 ஆம் தேதி வரை அதிகாலை 4.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், ஆவடி – அரக்கோணத்திற்கு அதே நாட்களில் காலை 6.20 மணி இயக்கப்படும் மின்சார ரெயில், செண்ட்ரல் – அரக்கோணத்திற்கு காலை 6.30 மணி, 9.10 மணி, 10.30 மணி, 11 மணி, 12.40, மதியம் 1.25, பிற்பகல் 3.45, மாலை 4.45, 5.15, 5.45, 6.05, 6.40, இரவு 7.30, 7.45, 8.20, 9.10, 10.00, 10.55 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரெயில்கள் அரக்கோணம் – திருவாலாங்காடு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.

21 மின்சார ரெயில்கள் அரக்கோணம் – திருவாலங்காடு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. மொத்தம் 48 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. திருத்தணி – செண்ட்ரலுக்கு ஜூன் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை காலை 6.20 மணிக்கு சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளதாக சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.


Smacy News 7 hours ago
Home Flash News