விவசாயக் கடன் தள்ளுபடி- விஜய் அதிரடி அறிவிப்பு
சிறு, குறு விவசாயிகளின் பயிர்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படுவதாக முதவர் விஜய் அறிவித்துள்ளார். அதாவது குறு விவசாயிகள் வாங்கிய ரூ70,000 வரை கடனுக்கு ரூ. 30,000 தள்ளுபடி, ரூ 80,000 வரை கடனுக்கு ரூ. 20,000 தள்ளுபடி செய்யப்படுகிறது. குறு விவசாயிகள் ரூ.60,000 வரை கடன் வாங்கியிருந்தால் ரூ.40,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு விவசாயிகளுக்கு 50% வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். கடன் தள்ளுபடியால் 14.22 லட்சம் விவசாயிகள் பயனடைவர். 2025 மே 1 முதல் பிப்.28ஆம் தேதி வரை கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.