Select Location
All Locations
State
Region
City / District
கார்த்தி பிறந்தநாள் - சிறப்பு போஸ்டர் வெளியிட்ட 'சர்தார் 2' படக்குழு நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டர் வெளியிட்டு ‘சர்தார்-2’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் 'சர்தார்'. பி.எஸ். மித்ரன் இயக்கிய இப்படத்தில் கார்த்தி அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமான 'சர்தார் 2' உருவாகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து கூறி இருக்கிறது.


Dhina Thanthi 56 minutes ago
Home Flash News