Select Location
All Locations
State
Region
City / District
சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு: கடினமாக இருந்ததாக பட்டதாரிகள் கருத்து

சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு: கடினமாக இருந்ததாக பட்டதாரிகள் கருத்து

சென்னை: ஐஏஎஸ்​ உட்பட சிவில் சர்​வீஸ் பணிக்​கான முதல்​நிலைத் தேர்வு சற்று கடின​மாக இருந்​த​தாக தேர்​வர்​கள் தெரி​வித்​தனர். நம்​நாட்​டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 வித​மான உயர் பதவி​களுக்கு மத்​திய அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (யுபிஎஸ்​சி) சார்​பில் ஆண்​டு​தோறும் குடிமைப் பணி தேர்​வு​கள் (சி​வில் சர்​வீஸ்) நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. இதற்​காக முதல்​நிலை, முதன்​மை, நேர்​காணல் என மொத்​தம் 3 கட்​டங்​களாக தேர்​வு​கள் நடை​பெறும்.

இதில் பட்​ட​தா​ரி​கள் பெறும் மதிப்​பெண்​களை வைத்து இறுதி முடிவு​கள் வெளி​யிடப்​படும். அதன்​படி நடப்​பாண்டு 933 பணி​யிடங்​களை நிரப்​பு வதற்​கான அறி​விப்பை கடந்த பிப்​ர​வரி 4-ம் தேதி யுபிஎஸ்சி வெளி​யிட்​டது. இதில் முதல்​நிலைத் தேர்​வெழுத நாடு முழு​வதும் 8 லட்​சத்து 19,372 பட்​ட​தா​ரி​கள் விண்​ணப்​பித்​தனர். தமிழகத்​தில் மட்​டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பதிவு செய்​திருந்​தனர். இந்​நிலை​யில் முதல்​நிலை தேர்வு நாடு முழு​வதும் 79 நகரங்​களில் நேற்று நடை​பெற்​றது. இத்​தேர்வை சுமார் 7 லட்​சம் பேர் வரை எழு​தி​ய​தாக கூறப்​படு​கிறது.

மேலும், தமிழகத்​தில் சென்னை உட்பட 5 நகரங்​களில் நடத்​தப்​பட்ட தேர்வை 40 ஆயிரம் பேர் வரை எழு​தி​ய​தாக தகவல்​கள் கிடைத்​துள்​ளன. காலை முதல்​தாள் தேர்​வும் ​(பொது அறி​வு), மதி​யம் 2-ம் தாள்​ (​திறனறி​வு) தேர்​வும் நடை​பெற்​றது. தேர்வு மையங்​களில் பல்​வேறு கடும் கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டிருந்​தன. தேர்​வறைக்​குள் பலத்த பரிசோதனைக்கு பின்​னரே பட்​ட​தா​ரி​கள் அனு​ம​திக்​கப்​பட்​டனர். இந்த தேர்வை பொறுத்​தவரை வினாத்​தாள்​கள் கடந்​தாண்​டை​விட சற்று கடின​மாக இருந்​த​தாக தேர்​வர்​கள் தெரி​வித்​தனர். மேலும், முதல்​நிலைத் தேர்வு முடிவு​கள் இரு வாரங்​களில் வெளி​யிடப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதில் வெற்றி பெறு​பவர்​களுக்கு அடுத்​தகட்​ட​மாக முதன்​மைத் தேர்வு ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்​க​வுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.


Hindu Tamil 57 minutes ago
Home Flash News