Select Location
All Locations
State
Region
City / District
பிரபல மலையாள நடிகர் சந்தோஷ் கே. நாயர் காலமானார்

பிரபல மலையாள நடிகர் சந்தோஷ் கே. நாயர் காலமானார்

திருவனந்தபுரம், மலையாள திரைப்பட உலகின் பிரபல நடிகர் சந்தோஷ் கே. நாயர் (வயது 65) சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே இன்று அதிகாலை நடைபெற்றது. 1982ஆம் ஆண்டு பி.ஜி. விஸ்வம்பரன் இயக்கிய இது நங்களுடே கதா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சந்தோஷ் கேசவன் நாயர், வில்லன், கதாநாயகன், நகைச்சுவை நடிகர் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இன்று அதிகாலை மனைவியுடன் காரில் சென்றபோது, எதிர்பாராத விதமாக ஒரு வேன் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் சந்தோஷ் கேசவன் நாயர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Dhina Thanthi 1 hour ago
Home Flash News