Select Location
All Locations
State
Region
City / District
.மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன் ; ஆனால் மு.க.ஸ்டாலின் தோல்வி ஏமாற்றம்... வைகோ பேட்டி

மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன் ; ஆனால் மு.க.ஸ்டாலின் தோல்வி ஏமாற்றம்... வைகோ பேட்டி

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது பேசிய அவர், திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்த போது நாட்டில் இருக்கும் பிற மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டும் வகையில் எண்ணற்ற அரிய சாதனைகளை திட்டங்களாக நிறைவேற்றி தமிழகத்தை முன்மாதிரியாக விளங்க செய்தார். LongDistance Bus & Rail மகளிருக்கு, பள்ளி குழந்தைகளுக்கு, தாய்மார்களுக்கு என பல தரப்பினருக்கும் நன்மைகளை அளிக்க கூடிய பல திட்டங்களை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி செயல்படுத்தி காட்டியுள்ளார். தற்போது வெற்றி பெற்றிருக்கின்ற தவெக கட்சி அமைச்சரவை அமைகின்ற காலகட்டத்தில் இவை அனைத்தையும் சிறு தடையின்றி, தொய்வில்லாமல் தொடர வேண்டிய கடமை இருக்கிறது. திமுக அரசு செயல்படுத்தி வந்த ஒரு திட்டத்தை கூட விட்டு விடாமல், நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் இருப்பதால் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற முடியவில்லை. அதே போல் பல நலத்திட்டங்களை செயல்படுத்திய போதும் ஸ்டாலின் வெற்றி பெறாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் இது ஜனநாயகத்தின் தீர்ப்பு, மக்களின் இந்த தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

தவெக-விற்கு இன்னும் 10 இடங்கள் தேவை உள்ளதே , உங்களிடம் ஆதரவு கேட்டிருக்கிறார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசிய வைகோ, ம.தி.மு.க.விடம், த.வெ.க. ஆதரவு கேட்காது. திமுக கூட்டணி கட்சிகள் எப்போதும் வேறு கட்சியை ஆதரிக்காது. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் வேறு கட்சியுடன் தொடர்பில் இல்லை, மேலும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எப்போதும் உறுதியாக இருக்கும், மேலும் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடனே இருக்கும் என்று தான் நம்புவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


Dinakaran 1 hour ago
Home Flash News