Select Location
All Locations
State
Region
City / District
இன்று முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய விதிமுறைகள் அமல்..!

இன்று முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய விதிமுறைகள் அமல்..!

மத்திய அரசு 'ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை விதிகள் 2026' (PROG Rules 2026) தற்போது அறிவித்துள்ளது. அதன்படி இன்று மே 1 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த விதிகள், ஆன்லைன் விளையாட்டுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கின்றன. குறிப்பாக, பணத்தை வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே சமயம், இ-ஸ்போர்ட்ஸ் (e-sports) மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த விளையாட்டுகளை ஊக்குவிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய விதிகளின் கீழ், ஆன்லைன் விளையாட்டுகள் மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. முதலாவதாக, 'ஆன்லைன் மணி கேம்ஸ்' (Online Money Games) - இதில் பணத்தைச் செலுத்திக் கூடுதல் வெகுமதிகளைப் பெறும் விளையாட்டுகள் அடங்கும். இவை இந்தியாவில் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன. இரண்டாவதாக, 'ஆன்லைன் சோஷியல் கேம்ஸ்' (Online Social Games) - இவை பெரும்பாலும் பொழுதுபோக்கிற்காக விளையாடப்படுபவை. மூன்றாவதாக, 'இ-ஸ்போர்ட்ஸ்' (e-sports) - இவை திறமையை அடிப்படையாகக் கொண்ட போட்டிகள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பணப் பரிமாற்றம் கொண்ட எந்தவொரு விளையாட்டையும் 'இ-ஸ்போர்ட்ஸ்' பட்டியலில் சேர்க்க முடியாது என்று அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டது. இந்த விதிகளைக் கண்காணிக்க 'இந்திய ஆன்லைன் கேமிங் ஆணையம்' (Online Gaming Authority of India - OGAI) என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆணையம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும். இந்த அமைப்பில் மத்திய உள்துறை, நிதி, தகவல் மற்றும் ஒலிபரப்பு, விளையாட்டு மற்றும் சட்ட அமைச்சகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள். ஒரு விளையாட்டு ஆன்லைன் மணி கேமா அல்லது சாதாரண விளையாட்டா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் இந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு விளையாட்டைப் பற்றிய புகாரும் 90 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்ற காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விளையாடுபவர்களின் பாதுகாப்பிற்காகப் பல புதிய அம்சங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, விளையாடுபவர்களின் வயதைச் சரிபார்க்கும் 'ஏஜ் வெரிஃபிகேஷன்' (Age Verification), குழந்தைகள் விளையாடுவதைக் கட்டுப்படுத்த 'பேரண்டல் கண்ட்ரோல்' (Parental Control), மற்றும் ஒரு நாளைக்கு இவ்வளவு நேரம் தான் விளையாட வேண்டும் என்ற காலக் கட்டுப்பாடு (Time Limits) போன்றவை அமல்படுத்தப்பட உள்ளன. மேலும், விளையாட்டில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் புகார் அளிக்கப் புகார்தீர்வு மையங்கள் (Grievance Redressal) அமைக்கப்பட வேண்டும். முதலில் நிறுவனத்திடம் புகார் அளிக்கலாம், அங்கு தீர்வு கிடைக்காவிட்டால் அரசு ஆணையத்தை அணுகலாம்.


Smacy News 1 hour ago
Home Flash News