Select Location
All Locations
State
Region
City / District
‘98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன’ - ரிசர்வ் வங்கி

‘98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன’ - ரிசர்வ் வங்கி

புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் நோட்டுகளில் இதுவரை 98.47 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு மே 19ம் தேதி, 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. அறிவிக்கப்பட்டபோது, ​​புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்தது. இந்நிலையில் ஏப்.30ம் தேதி நிலவரப்படி இந்த மதிப்பு ரூ.5,451 கோடியாக குறைந்துள்ளது. இந்த நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டாலும், அவை இன்னும் சட்டப்பூர்வமாகச் செல்லும் என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் நேரில் சென்று மாற்றிக்கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம். எந்தவொரு தபால் நிலையத்திலிருந்தும் ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு இந்தியா போஸ்ட் மூலமாக நோட்டுகளை அனுப்பி தங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.


Malaimalar 1 hour ago
Home Flash News