சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக 40°C-க்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது.
இந்த நிலைமை காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட தகவலின்படி, மே மாதத்தில் தொடர்ந்து 4 முதல் 8 நாட்கள் வரை heatwave நிலை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும், மே 3க்கு பிறகு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிக வெப்பத்தை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
LIVE