கொடைக்கானல் சுற்றுலா இடங்களுக்கு நாளை விடுமுறை
கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள்,பேரிஜம் ஏரி மற்றும் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் ஆகியவை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.
நாளை (ஏப்.23) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆகவே, சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை. ஏப்.24-ம் தேதி முதல் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவர் என கொடைக்கானல் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.