Select Location
All Locations
State
Region
City / District
‘தமிழ்நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்று அமித்ஷா தெளிவாக சொல்லிவிட்டார்’ - இபிஎஸ்

‘தமிழ்நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்று அமித்ஷா தெளிவாக சொல்லிவிட்டார்’ - இபிஎஸ்

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு எந்த ஆபத்தும் இல்லை என உள்துறை அமைச்சரும், பிரதமரும் உறுதிப்படுத்திவிட்டனர் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சேலம், வீரபாண்டி பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக பேசிய அவர், நமது கூட்டணி இயற்கையான கூட்டணி, வலிமையான கூட்டணி. திமுக கூட்டணியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று பேசிக்கொண்டு இருப்பார்கள். ஸ்டாலின் தேர்தல் முடிவு தெரியும் முன்பே கருப்புச் சட்டை போடத் தொடங்கிவிட்டார். ஸ்டாலின் அவர்களே, எதற்கு கருப்புச் சட்டை போட்டிருக்கிறீர்கள்.?

எதுவுமே தெரியாமல், யாரோ சொன்னார்கள் என்று கருப்பு சட்டை போட்டிருக்கிறார். நாடாளுமன்றம் தொகுதி மறுவரையில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று தவறான கருத்தைப் பரப்பி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கருப்பு சட்டை போட்டார். ஸ்டாலின் அவர்களே, தமிழ்நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது. அந்த சதவீதம் குறையாது. இதை உள்துறை அமைச்சர் தெளிவாகச் சொல்லவிட்டார். நேற்று பிரதமர் நாடாளுமன்றத்தில் தெளிவாகச் சொல்லிவிட்டார். எந்த மாநிலமும் பாதிக்காதவாறு தொகுதி வரையறை செய்யப்படும் என்று உள்துறை அமைச்சரும், தெளிவாக சொல்லவிட்டார். தமிழகத்தில் இப்போது இருக்கிற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39 என்பதிலிருந்து 59 ஆக உயர்த்தப்பட உள்ளது.

இப்போது இருக்கிற சதவீதம் 7.18, இப்போது மத்திய அரசு அறிவித்துள்ளது 7.23. சதவீதம். அப்படியென்றால் அதிகமாக வந்துவிட்டது. இதை மாலை 6 மணிக்கே நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்திவிட்டார்கள். அப்போதே கருப்புச் சட்டையை கழற்றி இருக்க வேண்டியது தானே..? மத்திய அரசு அறிவித்த பிறகும், கருப்புச் சட்டை போட்டுக்கொண்டு 7 மணிக்குப் பேசுகிறார். மீண்டும் தமிழ்நாடு தாங்காது, தமிழ்நாடு முழுவதும் எல்லா வீடுகளிலும் கருப்புக் கொடி கட்ட வேண்டும் என்று ஸ்டாலின் சொன்னார். யாராவது கட்டினார்களா.? .நான் கோவை, மேட்டூப்பாளையம், திருப்பூரில் சுற்றிச் சுற்றி பார்த்தேன்.

ஒரு வீட்டில் கூட கருப்புக் கொடி கட்டவில்லை. ஏனென்றால் மக்களுக்கு தெரியும். மத்திய அரசு உறுதி கொடுத்துவிட்டது. இபிஎஸ் சொன்னால் சரியாக இருக்கும் என்று நம்புகிறார்கள். அதனால் யாரும் கருப்புக் கொடிகாட்டவில்லை. ” என தெரிவித்தார்.


24 News 1 hour ago
Home Flash News