... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
தமிழ்நாட்டில் அதிமுக வென்றாலும் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சிதான் அமையும் - ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேட்டி

தமிழ்நாட்டில் அதிமுக வென்றாலும் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சிதான் அமையும் - ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக வென்றாலும் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சிதான் அமையும் என ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மற்றொருபுறம் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. மேலும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிமுக வென்றாலும் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சிதான் அமையும் என ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியாக மட்டுமில்லாமல் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியாக இருக்கும். ஒன்றியத்தில் இருப்பது போலவே தமிழ்நாட்டிலும் கூட்டணி ஆட்சியாக அமையும். 2014ல் டெல்லியில் பாஜக பெரும்பான்மையுடன் வென்றபோதும் சிறிய கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரப்பட்டது. டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கொடுக்கப்பட்டது.

டெல்லியை போலதான் தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சி அமைப்பார், அமைச்சரவையில் பாஜக, கூட்டணி கட்சிகள் இடம்பெறும் என்று கூறினார்.

Source : Dinakaran

1 hour ago

Home Flash News