... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் அமெரிக்கா-இஸ்ரேல் விலை கொடுக்கும்.. லாரிஜானி படுக்கொலைக்கு பழி தீர்ப்போம் - ஈரான் உச்ச தலைவர்

ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் அமெரிக்கா-இஸ்ரேல் விலை கொடுக்கும்.. லாரிஜானி படுக்கொலைக்கு பழி தீர்ப்போம் - ஈரான் உச்ச தலைவர்

ஈரான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலி லாரிஜானியை கடந்த மார்ச் 17 அன்று இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார். பாதுகாப்புக்காக தனது இருப்பிடத்தை தொடர்ந்து மாற்றி வந்த அவர் அன்றைய தினம் தனது மகள் பாத்திமா லாரிஜானி வீட்டுக்கு ரகசியமாக சென்றதை இஸ்ரேல் உளவுத்துறையான மொஸாட் மோப்பம் பிடித்தது. அவர் மகளின் வீட்டுக்குள் நுழைந்ததும் அதன் மீது இஸ்ரேல் போர் விமானம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அவர், அவரது மகன் மோர்டெசா லாரிஜானி மற்றும் உதவியாளர் கொல்லப்பட்டனர்.

நாட்டின் உச்சத் தலைவருக்கு அடுத்தபடியாக மிகவும் சக்திவாய்ந்த தலைவரான லாரிஜானியின் மரணம் ஈரானை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. "லாரிஜானியும் அவரது ஆதரவாளர்களும் இப்போது நரகத்தில் இருக்கிறார்கள்" என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மார்தட்டினார். இந்நிலையில் லாரிஜானி மரணம் தொடர்வாக ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு, அந்த விலையை அமெரிக்காவும் இஸ்ரேலும் கொடுத்தே தீர வேண்டும். நீதி உறுதி செய்யப்படும். லாரிஜானி ஒரு சிறந்த தலைவர், தொலைநோக்கு பார்வை கொண்டவர், புத்திசாலி. பல்வேறு துறைகளில் பலதரப்பட்ட அனுபவங்களைக் கொண்டவர் அவர். லாரிஜானி போன்ற ஒரு நபர் கொல்லப்பட்டது, அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதையும், இஸ்லாத்தின் எதிரிகளுக்கு அவர் மீது எவ்வளவு ஆழமான வெறுப்பு இருந்தது என்பதையும் காட்டுகிறது. இஸ்லாமிய அமைப்பின் மரத்தின் அடியில் சிந்தப்பட்ட இந்த இரத்தம் அதனை இன்னும் வலிமையாக்கும். நிச்சயமாக, ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு, அந்த கொலைகாரர்கள் விரைவில் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்" என்று தெரிவித்தார்.

Source : Malaimalar

1 hour ago

Home Flash News