... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#உலக தண்ணீர் தினம்: திருச்சியில் வரும் 22-ஆம் தேதி சத்குருவின் காவேரி கூக்குரல் சார்பில் மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கம்!

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் வரும் 22-ஆம் தேதி சத்குருவின் காவேரி கூக்குரல் சார்பில் மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கம்!

சென்னை: சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு "வான் அமிர்தம்" என்ற மாபெரும் மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கம் வருகின்ற 22.03.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திருச்சி SRM மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது.Urban Transit இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (18/03/2026) நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் மற்றும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் (தென் கிழக்கு கடலோர மண்டலம்) இயக்குனர் முனைவர் M. சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் தமிழ்மாறன் பேசுகையில், “மழைநீர் சேகரிப்பு என்பது இன்றைய காலத்தின் மிக முக்கியமான தேவையாக உள்ளது. வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் மழைநீரை எவ்வாறு முறையாகச் சேமிப்பது என்பது குறித்த விரிவான பயிற்சிகளையும், செயல்முறை விளக்கங்களையும் இந்த கருத்தரங்கில் வழங்க இருக்கின்றோம்.

இவர்களுடன், பெங்களூர் 'தண்ணீர் அறிவுசார் அறக்கட்டளையின்' இயக்குனர் சுஜாதா ஐயப்பா மசாகி, மானாவாரி நிலங்களிலும் மழைநீர் சேமிப்பு மூலம் ஆழ்துளைக் கிணறுகளை எவ்வாறு சாத்தியப்படுத்துவது என்பது குறித்த அரிய தொழில்நுட்பங்களை வழங்குகிறார். நீர்நிலை ஆர்வலர்களுக்கு சிறப்பு விருதுகள்; இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நீர் மேலாண்மை மற்றும் நீர் பாதுகாப்பில் தன்னலமற்ற முறையில் மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றிவரும் முக்கிய நீர்நிலை ஆர்வலர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது. விற்பனை கண்காட்சி; மேலும், கருத்தரங்கு நடைபெறும் வளாகத்தில் மழைநீர் சேகரிப்புக் கருவிகள், நவீன நீர்ப்பாசன முறைகள் மற்றும் இயற்கை வேளாண் உற்பத்திப் பொருட்களின் பிரம்மாண்டமான விற்பனை மற்றும் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு அவசியம்; இந்த மாபெரும் கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர் 94425 90079 அல்லது 94425 90081 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டோ அல்லது https://forms.gle/Rr5wZVUjCWXqBZqi6 என்ற லிங்க் மூலமாகவோ தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்” எனக் கூறினார்.

Source : Dinakaran

2 hours ago

Home Flash News