... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#“100 நாள் வேலை திட்டத்தை ஒழித்துக் கட்ட மோடி அரசு முயற்சி” - ஐ.பெரியசாமி கண்டனம்

“100 நாள் வேலை திட்டத்தை ஒழித்துக் கட்ட மோடி அரசு முயற்சி” - ஐ.பெரியசாமி கண்டனம்

சென்னை: “100 நாள் வேலை புதிய சட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் மோடி அரசு எடுக்கவில்லை. இதன்மூலம் இத்திட்டத்தினை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட முயற்சிக்கும் மோடி அரசின் வஞ்சகத்துக்கும், அதற்கு துணை போகும் பழனிசாமியின் பச்சை துரோகத்துக்கும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான பிரதமர் மன்மோகன் ஆட்சியில், 2006-ல் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில், 100 நாள் வேலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் கோடிக்கணக்கான கிராம மக்கள் பயன் அடைந்து வந்தார்கள். கிராமப்புறத்தில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் 18 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது சட்டப்படி உரிமையாக்கப்பட்டது.

வறுமை ஒழிப்புத் திட்டமான 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை மோடி ஆட்சிக்கு வந்தும் படிப்படியாக அழிக்க ஆரம்பித்தார். திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டினார்கள். 2021-2022-ல் 98,468 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில் 2022 – 2023-ல் 73,000 கோடி ரூபாயும் 2023-2024-ல் 60 ஆயிரம் கோடி ரூபாயும் என ஆண்டுதோறும் குறைத்து நிதியை ஒதுக்கி வந்தார்கள். இந்தப் பற்றாக்குறையால் ஆண்டுக்குச் சராசரியாக வெறும் 40 நாட்கள் வேலை மட்டுமே என்ற நிலை உருவானது. இதனால், கிராமப்புறத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 100 நாட்களுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டுமென்றால் ரூபாய் 2.72 லட்சம் கோடி தேவை. ஆனால், அதற்குரிய நிதியை ஒதுக்காமல் மோடி அரசு வஞ்சித்தது. 2023-2024-ல் ஒதுக்கப்பட்ட தொகையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.198 சதவீதம்தான். இந்தத் திட்டத்தில் 100 நாட்கள் கிடைத்த வேலை, மோடி ஆட்சியில் 30 நாட்கள் கூட கிடைப்பதில்லை. 2021-ம் ஆண்டு முதல் 7.6 கோடி தொழிலாளர்களின் நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணி அட்டைகள் நீக்கப்பட்டன.

ஆனால், எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமியோ இந்த அநீதிக்கு வக்காலத்து வாங்கி தமிழ்நாட்டுக்குத் துரோகத்தைச் செய்தார். கிராமப்புற மக்களின் வயிற்றில் அடிக்கும் புதிய சட்டத்தை ஆதரித்து தனது துரோகப் பணியைச் செவ்வனே செய்து முடித்த பழனிசாமி, தான் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதும் தெரிந்தும் 150 நாட்களாக வேலையை உயர்த்துவேன் என நாடகமாடிக் கொண்டிருக்கிறார். புதிய சட்டத்தை ஒன்றிய அரசு உடனே அமல்படுத்த வேண்டும் என்று கூடச் சொல்ல பழனிசாமிக்கு துணிவில்லை. நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு செய்து வரும் வஞ்சகத்திற்கும் பழனிசாமியின் பச்சைத் துரோகத்திற்கும் மிக விரைவில் தமிழ்நாட்டு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News