... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம்

டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம்

சென்னை: பணி நிரந்​தரம், கால​முறை ஊதி​யம், காலி பாட்​டில் திரும்​பப் பெறும் திட்​டத்​துக்கு டாஸ்மாக் பணி​யாளர்​களை பயன்​படுத்​தாமல் மாற்று வழி​யில் நடை​முறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி டாஸ்மாக் தொழிற்​சங்​கங்​களின் கூட்டு நடவடிக்கை குழு கடந்த பிப்​.1 முதல் 19-ம் தேதி வரை தொடர் காத்​திருப்​புப் போராட்​டம் நடத்தியது.

பின்னர் அமைச்​சர் முத்​து​சாமி, போராட்​டக் குழு​வை அழைத்து பேச்​சு​வார்த்தை நடத்தி கோரிக்​கைகளை நிறைவேற்​று​வ​தாக உறுதி அளித்​தார். இதையடுத்து டாஸ்மாக் பணி​யாளர்​களுக்கு ரூ.1000 ஊதிய உயர்வு உட்பட 5 அறி​விப்பு​கள் சமீபத்தில் வெளி​யிடப்​பட்​டன.

இந்​நிலை​யில், இந்த அறி​விப்​பு​கள் ஏமாற்​றம் அளிப்​ப​தாக அவர்கள் அதிருப்தி தெரி​வித்​துள்​ளனர். மேலும் கூட்டு நடவடிக்​கை குழு சார்பில் இன்​று முதல் டாஸ்மாக் மேலாண் இயக்​குநர் அலு​வல​கம் அருகே கால​வரையற்ற காத்​திருப்பு போராட்​டத்​தில் ஈடு​பட​ உள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து டாஸ்மாக் பணி​யாளர்​கள் கூறிய​தாவது: அமைச்​சர் நடத்​திய பேச்​சு​வார்த்​தை​யின்​போது ஒப்​புக்​கொண்ட விஷ​யங்​களில், ஊதிய உயர்வு ரூ.1,000 என்ற ஒரு அறி​விப்பு மட்​டும் இடம்​ பெற்​றிருந்​தது.

பணி நிரந்​தரம், கால​முறை ஊதி​யம், ஓய்​வூ​தி​யம் உள்​ளிட்ட கோரிக்​கைகள் தொடர்​பாக மேலாண்மை இயக்​குநர் தலை​மை​யில் குழு அமைக்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டது. ஆனால், அறிக்​கை​யில் குழு என்ற வார்த்​தையே இடம்​பெற​வில்​லை. இடைக்​கால ஊதிய உயர்​வாக ரூ.5,000 கேட்​டிருந்​த​போ​தி​லும், ரூ.1000 தான் கொடுத்​திருக்​கிறார்கள்.

இந்​நிலை​யில் எங்​களு​டைய கோரிக்​கையை மறு​பரிசீலனை செய்​து, ஒப்​புக்​கொண்​டபடி மாற்று அறிக்​கையை வெளி​யிட வலி​யுறுத்தி இன்​று​முதல் தொடர் காத்​திருப்​புப் போராட்​டத்​தில் ஈடுபட உள்​ளோம். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

Source : Hindu Tamil

2 hours ago

Home Flash News