பொங்கல் கரும்பை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: பொங்கல் கரும்பை கொள்முதல் செய்வதில் ஊழல் செய்வதை கைவிட்டு நடப்பாண்டிலாவது கரும்பை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் சேர்த்து வழங்கப்படும் பன்னீர் கரும்பை நடப்பாண்டிலும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யாமல், இடைத்தரகர்களிடம் இருந்து வாங்குவதற்காக நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.