உடனடி போர் நிறுத்தத்துக்கு தாய்லாந்து - கம்போடியா ஒப்புதல்: கூட்டு அறிக்கை வெளியீடு!
பாங்காக்: உடனடி போர் நிறுத்தத்துக்கு தாய்லாந்தும் கம்போடியாவும் ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பாக இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே நிலவிய எல்லைப் பிரச்சினை காரணமாக போர் மூண்டது. போர் விமானங்கள், ராக்கெட்டுகள், பீரங்கிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு இரு நாடுகளும் தாக்குதலில் ஈடுபட்டன. இந்த தாக்குதல் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரு தரப்பிலும் இடம் பெயர்ந்து சென்றனர்.