ததும்பி வழியும் தமிழரின் பெருமிதம்
திருநெல்வேலி என்றால் ஜங்ஷன் திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, சித்த மருத்துவ கல்லூரி போன்று தனித்துவமாக மக்கள் மனதில் இடம் பிடிக்கும் இடமாகிவிட்டது பொருநை தொல்லியல் அருங்காட்சியகம்.
பொருநை என்பது தாமிரபரணி ஆற்றின் பண்டைய பெயர்தான்.அந்தப் பெயரிலேயே தற்போது நெல்லையில் அமநை்துள்ள அருங்காட்சியகம் பொதுமக்களின் மகத்தான் வரவேற்பை பெற்றுள்ளது.