தமிழக பள்ளிகளுக்கு கல்வித் துறை முக்கிய சர்குலர்: 'ஒலிபெருக்கி பயன்படுத்தாமல் தினமும் இந்தப் பாடல்களை மாணவர்கள் பாட வேண்டும்'
தனியார் பள்ளிகளில் தினந்தோறும் காலை வணக்கக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நாட்டுப்பண் ஆகியவற்றை மாணவர்களே பாட வேண்டும். இதற்காக ஒலிபெருக்கியைப் பயன்படுத்திக் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது.
தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், மாணவர்களை உடல் ரீதியாகவோ அல்லது உளவியல் ரீதியாகவோ (Physical or Psychological Harassment) எந்த வகையிலும் துன்புறுத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.