திருப்பதியில் ரூ.35,000 கோடியில் ஆன்மிக நகரம் - 1,400 ஏக்கரில் அமைக்கிறது ஆந்திர சுற்றுலா துறை
திருப்பதி: ஆந்திராவில் 5,000 ஆண்டு இந்து மதக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், ரேணிகுண்டாவில் ஆன்மிக நகரம் அமைகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனையின்படி, டெல்லா டவுன்ஷிப் நிறுவனம் திருப்பதியில் ஆன்மிக நகரத்தை உருவாக்க முன்வந்துள்ளது. இந்து மதக் கலாச்சாரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதே இதன் நோக்கம். சுமார் 5,000 ஆண்டுகள் பழமையான இந்து மதக் கலாச்சாரம் தொடக்கம் முதல் வருங்கால சந்ததியினரும் அறியும் வகையில் இந்நகரம் அமைகிறது.