அமெரிக்காவின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி: இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.60 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை அறிவித்த அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்காவின் பாதுகாப்பு படைகளில் பணியாற்றிவரும் 14.5 லட்சம் பேருக்கு இன்ப அதிர்ச்சியாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.60 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகையை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பு படைகளில் பணியாற்றிவரும் சுமார் 14.5 லட்சம் பேருக்கு மிக பெரிய இன்ப அதிர்ச்சியாக தலா 1776 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.60 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகையியை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா சுதந்திரம் பெற்று ஒரு தேசமாக உருவான ஒரு ஆண்டாக 1776ஐ நினைவு கூறும் வகையில் இந்த தொகை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.