பிப்ரவரி 2026ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா: அமைச்சர் சேகர்பாபு
மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோடலில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது, இந்த ஆய்வுக் கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் தியாகராஜன், மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றோர்கள்.