South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

இருவேறு மதங்களை சேர்ந்தவர்களின் திருமணத்தை இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்வது செல்லாது: ஐகோர்ட்

இருவேறு மதங்களை சேர்ந்தவர்களின் திருமணத்தை இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்வது செல்லாது: ஐகோர்ட்

சென்னை: ‘இருவேறு மதங்களைச் சேர்ந்தவர்களின் திருமணத்தை இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்வது சட்டப்படி செல்லாது’ என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் 2009, பிப்.20 அன்று சென்னையில் திருமணம் நடைபெற்றதாக இந்து திருமண சட்டத்தின் கீழ் ஒரு சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அந்த திருமணம் தனது விருப்பத்துக்கு மாறாக தன்னை ஏமாற்றி நடந்த திருமணம் என்பதாலும், தான் கிறிஸ்தவர் என்பதால் இந்து திருமண சட்டத்தின்கீழ் அந்த திருமணம் செல்லாது என அறிவிக்க கோரி, சம்பந்தப்பட்ட இளைஞர், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அதை எதிர்த்து அவர், சென்னை உயர் நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், எஸ். ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் இளைஞர், தான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மனுதாரர், 1998 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் ஞானஸ்நானம் பெற்றதற்கான ஆவணங்கள் இருப்பதாக கூறியதை குடும்பநல கோர்ட் ஏற்க மறுத்துள்ளது.

ஏற்கெனவே கிறிஸ்தவராக இருப்பவர் மற்றொரு கிறிஸ்தவ சபையில் இணையும்போது புதிதாக ஞானஸ்நானம் பெறுவது வழக்கமானதுதான். இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 5-ன்படி திருமணம் செய்து கொள்ளும் கணவன் - மனைவி இருவருமே இந்துக்களாக இருக்க வேண்டும்.

அதன்படி இருவேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும்போது அதை இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்தால் அது சட்டப்படி செல்லாது. மேலும், தமிழகத்தில் நடைபெறும் சுயமரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் பிரிவு 7-ஏ-ம் இதுபோன்ற திருமணங்களுக்கு பொருந்தாது.

சுயமரியாதை திருமணம் செய்து கொண்டாலும் இருவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். திருமணப் பதிவின்போது அளிக்கப்படும் விவரங்களின் உண்மைத் தன்மையை சார்-பதிவாளர்கள் சரிபார்க்க வேண்டும்.

ஒருவேளை இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் மற்றும் சிறப்பு திருமணச் சட்டம் என அதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளைக் கடைபிடிக்கவேண்டும்.

இந்த வழக்கில், திருமணம் பதிவு செய்யப்பட்டு சுமார் 16 ஆண்டுகள் கழித்தே அது சட்டப்படி செல்லாது என அறிவிக்க வேண்டிய சூழல் வேதனை அளிக்கிறது.

எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க இந்த தீர்ப்பை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சார்-பதிவாளர்களுக்கும், குடும்ப நல நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கையாக பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டனர்.

அத்துடன் மனுதாரரின் திருமணப்பதிவு சட்டப்படி செல்லாது என அறிவித்து குடும்ப நல நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

📍 Tamilnadu
📰 Hindu Tamil
🕒 7 hrs ago

Related News

பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம்: தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம்: தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
‘ஆட்சியருக்கே இந்த நிலையா? கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்
‘ஆட்சியருக்கே இந்த நிலையா? கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்
காஞ்சியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு
காஞ்சியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு
⬅ Back
➕ Post Ad
To Ads ➡