South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- துணிகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்

ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- துணிகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்

சபரிமலை பம்பை ஆற்றில் ஆடைகளை வீசினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பம்பை ஆற்றில் தினமும் டன் கணக்கில் துணிகள் கொட்டப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. ஆற்றில் துணிகளை வீசுவது முறையற்ற செயல் என்றும், இதனால் ஆற்றின் தூய்மை பாதிக்கப்படுவதாகவும் பத்தனம்திட்டா மாவட்ட துணை ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தரிசனத்துக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் தங்கள் அணிந்துவரும் ஆடைகள் மற்றும் பிற தனிப்பட்ட பொருட்களை பம்பை மற்றும் அதன் துணை நதிகளில் நீர் போது வீசவும், பிளாஸ்டிக் கழிவுகள், திடக்கழிவுகள் மற்றும் மக்கும் கழிவுகளை கொட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி பம்பை ஆற்றில் துணிகளை வீசுவதைத் தடுக்க, மீறுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

📍 Tamilnadu
📰 Smacy News
🕒 1 day ago

Related News

பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம்: தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம்: தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
‘ஆட்சியருக்கே இந்த நிலையா? கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்
‘ஆட்சியருக்கே இந்த நிலையா? கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்
காஞ்சியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு
காஞ்சியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு
⬅ Back
➕ Post Ad
To Ads ➡