கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் தோனி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 முதல் நீடித்த அவரது 19 ஆண்டுகால ஆட்டப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்திற்கு அழைத்துச் சென்ற தோனி, இனி 2027 ஐபிஎல் சீசன் முதல் அணியின் வழிகாட்டியாக (Mentor) செயல்பட உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2020ஆம் ஆண்டே ஓய்வு பெற்றிருந்த தோனி, தற்போது ஐபிஎல் விளையாட்டு வாழ்க்கைக்கும் விடை கொடுத்துள்ளார்.
தோனியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.